வெள்ளப்பாதிப்பு – கடலூரில் துறையின் செயலாளர்,விழுப்புரத்தில் இயக்குநர்

வெள்ள பாதிப்பு

சமீபத்தில் ஏற்பட்ட பெரும் மழை காரணமாக கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை இன்னும் சில மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாது.

முதல்வர் உட்பட அமைச்சர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.

சுனாமி காலகட்டத்தில் கடலூரில் தனது கடும் பணியால் மக்களிடம் நல்மதிப்பை பெற்ற ககன்தீப்சிங் பேடி இஆப இப்போது ஊரகவளர்ச்சித்துறை செயலாளராக உள்ளார். முதல்வரின் உத்தரவின்படி, கடலூர் மாவட்டத்தில் பம்பரமாக சுழன்று பணி செய்து வருகிறார் துறையின் செயலாளர்.

அதுபோல, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்தவரும்.,சமீபத்தில் தூத்துக்குடியில் பெரும் மழை காலத்தில் சிறப்பாக பணியாற்றியவருமான ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப இப்போது விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண பணிகளை செய்து வருகிறார்.

இரண்டு இந்த ஆட்சி பணியாளர்களும் களத்தில் நின்று பணியாற்றி வருவதை நமது இணைய செய்தி தளத்தின் சார்பாக பாராட்டுகிறோம்.

Also Read  ஊராட்சிகளில் ஆன்லைனில் கட்டிட அனுமதி