கே.வானதி
சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக பணியாற்றிய ஆ.ரா.சிவராமன் அவர்கள் அரியலூர் மாவட்ட திட்ட இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
சிவகங்கை புதிய திட்ட இயக்குநராக திருமதி.கே.வானதி அவர்கள் இன்று (04-11-2024) பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சி), உதவி இயக்குநர்(தணிக்கை), மாவட்ட செயலாளர்(பஞ்சாயத்து) மற்றும் மாவட்ட , ஒன்றிய அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள திட்ட இயக்குநரின் பணி காலத்தில் சிவகங்கை சீமை சிறக்கட்டும் என நமது இணைய செய்தி தளத்தின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.