ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர் தற்கொலை-சந்தேகத்தை கிளப்புவதாக அறிக்கை

தற்கொலை

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

கடலூர் மாவட்டம்,அன்னாகிராமம் ஒன்றியம்,நரிமேடு ஊராட்சி செயலர் திரு.அய்யனார் அவர்கள் நேற்று ஊராட்சிமன்ற அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும்,துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஊராட்சி அலுவலகத்திலேயே இச்சம்பவம் நடைபெற்று இருப்பதால் இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது..

இவர் பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு பிரச்சனை உள்ளதா என காவல்துறை தனி விசாரணைக்குழு ஒன்று அமைத்து மிகுந்த கவனத்துடன் விசாரணை செய்து நீதியை நிலைநாட்டிட வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

Also Read  சின்னபட்டாகாடு ஊராட்சி - அரியலூர் மாவட்டம்