திமுக மாவட்ட செயலாளரை பற்றியதா ஒற்றரே…
ஆமாம் தலைவா…தர்மபுரி மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை மிரட்டும் போக்கு போல தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது.
ஆளும் தலைமை இதனை எல்லாம் கண்டிப்பது இல்லையா…
அதைவிட..தனிஅலுவலர் ஆளுமைக்கு உட்டபட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை ஆளும்கட்சியினர் அவமானப்படுத்தும் செயல் தொடர்ந்து நடக்கிறது தலைவா…
அரசு அதிகாரிகள் தற்போதைய ஆளும்கட்சியை எப்போதும் ஆதரிப்பவர்கள்தானே.அவர்களுக்கே இந்த நிலையா ஒற்றரே..
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆளும்கட்சியினர் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளை மிரட்டி, தாங்கள் சொல்வதை மட்டுமே கேட்கவேண்டும் என உத்தரவு இட்டுள்ளனர்.
ஏற்கனவே அதை பற்றி நாம் பேசியுள்ளோமே..
ஆமாம் தலைவா…சமீபத்தில் சிவகங்கை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அந்த மாவட்ட ஊரக வளர்ச்சி அதிகாரிகளை நீண்டநேரம் தனது அலுவலகத்தில் காக்கவைத்து அவமானப் படுத்திய செயல் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
அப்படியா..இது எங்கே போய் முடியுமென தெரியவில்லை ஒற்றரே…
தனது கட்சிக்காரர்களோடு அலுவலக அறையில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருப்பது. அந்த நேரத்தில் அதிகாரிகளை வரவைத்து காக்க வைப்பது என்ற வழிமுறை அனைத்து ஆளும்கட்சியினரும் கடை பிடித்து வருகின்றனர் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.