என்ன ஒற்றரே…என்ன விசயம்
ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குநர் இடமாறுதல் செய்யப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு தானே..
அதற்கு முன்பு வெளிவந்த இடமாறுதல் உத்தரவில் தென்கோடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்ட ஒரு அதிகாரி இன்னும் பணியில் சேரவில்லையாம் தலைவா…
என்ன காரணமாம் ஒற்றரே…
இஆப தேர்விற்கு படிப்பதாகவும், வேறு இடத்திற்கு இடமாறுதல் கேட்டுள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் கிடைக்கிறது தலைவா..
சமீபத்திய இடமாறுதலின் நிலை என்ன ஒற்றரே..
தனி அலுவலராக உதவி இயக்குநர்கள் உள்ளதால், இட மாறுதல் செய்யப்பட்ட இடங்களில் பணியில் சேர்வதில் காலதாமதம் ஆவதாக தெரிகிறது தலைவா…
சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இடமாறுதலில் கவனம் செலுத்திடல் அவசியம் ஒற்றரே..
சரியாக சொன்னீர்கள் தலைவா…ஆணையரின் உத்தரவை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.