ஆணையரின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது ஒற்றரே…
ஆமாம் தலைவா…இடமாறுதல் ஆணையை பல இடங்களில் மதிக்காமல் இருக்கும் அதிகாரிகளை பற்றி கடந்த சந்திப்பில் பேசினோம் அல்லவா..
ஆமாம் ஒற்றரே.அதற்கான விடையாக தலைமை அலுவலகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு தகவல் சென்றுள்ளது.
அதன்படி, இடமாறுதல் பட்டியலில் இருப்பவர்களை தங்களுக்குரிய இடத்தில் பணியில் சேர்வதற்கான கோப்பு தயாராகி வருகிறதாம் தலைவா,இந்த வாரத்திற்குள் அவரவர் பணியிடத்தில் பணியாற்ற சென்றுவிடுவர் என கூறிவிட்டு மாயமாய் மறைந்தார் ஒற்றர்.