காக்கும் கரங்கள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஊழியர்களின் நலன்களுக்காக பல்வேறு சங்கங்கள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. நமது இணைய தளத்தின் சார்பாக அனைத்து சங்கங்களின் செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.
அதில் ஒரு சங்கமாக ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் போராட்ட செயல்களை பற்றிய செய்தி அல்ல இது.
சங்கத்தின் உறுப்பினர்களின் எதிர்கால நலனுக்காக திருச்சியில் 3 கோடிக்கும் மேல் மதிப்புள்ள இடத்தை வாங்கி உள்ளனர். அதில், தலைமை அலுவலகம் மற்றும் வருமான வரும் அளவிற்கான வாடகை விடுவதற்குரிய கட்டிடம் சுமார் 16 கோடியில் கட்டிவருகின்றனர்.
இவை அனைத்தையும் விட, காக்கும் கரங்கள் என்ற பிரிவை ஏற்படுத்தி ஊராட்சி செயலாளர்கள் திடிரென மரணம் முற்றால் உடனடியாக 50 ஆயிரம் நிதி உதவி அளித்து வருகின்றனர். தோய்வாய்பட்ட செயலாளர்களுக்கு மருத்துவ செலவுக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
வைப்பு தொகை
நாம் தொடர்ந்து அவர்களின் சங்க பணிகளை கவனித்து வந்ததில், சமீபத்திய அவர்களின் ஒரு செயல்பாடு நம்மை நெகிழச் செய்துவிட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் ஒன்றியத்தை சேர்ந்த பாண்டியன் என்ற ஊராட்சி செயலாளர் இளம் வயதில் திடீரென இயற்கை எய்திவிட்டார். அவருக்கு நான்கு பெண் குழந்தைகள். அவர்களின் நலனுக்காக நிரந்தரமாக ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டுமென மாநில மையம் அறிவிக்கிறது.
இரண்டே நாட்களில் ஊராட்சி செயலாளர்களின் பங்களிப்பால் 2லட்சத்தும் அதிமான பணம் சேர்க்கப்பட்டுள்ளது.அதனை கொண்டு நான்கு பெண் குழந்தைகளின் பெயரில் தலா 50 ஆயிரம் ரூபாய் நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தி மாவட்ட ஆட்சியரின் மூலமாக வழங்க உள்ளனர்.
இந்த இதயம் கவர்ந்த செயலுக்காக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் அனைவருக்கும் நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக ராயல் சல்யூட்.