TNGOTS- மாநில செயற்குழு கூட்டம்

TNGOTS

அமைப்பின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 19.01.2025 ஞாயிறு காலை 10.00 மணி அளவில் நாமக்கல் கவுண்டம் பாளையம், பவர் ஆபீஸ் அருகில் மீனாட்சி மஹாலில் வைத்து சிறப்பாக நடை பெற்றது…

TNGOTS மாநில அமைப்பு செயலாளர் நாமக்கல் சரவணன் தலைமை தாங்கினார்.., மாநில இணை செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.

TNGOTS மாநில தலைவர் தருமபுரி க.கிருஷ்ணன் கோரிக்கை விளக்க சிறப்புரை யாற்றினார்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாநில தலைவர் கோவை க. பால சுப்பிரமணியன் அவர்கள்,

மக்களின் வழக்கறிஞர் உயர் திரு பா.பா மோகன் BSCBL, அவர்கள். .

தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்க நிறுவன தலைவர் கோவை திரு ரங்கராஜ் அவர்கள்

ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்க மாநில தலைவர் மதுரை R.சார்லஸ் ரெங்கசாமி அவர்கள்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சேலம்குமரேசன் அவர்கள்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் செயல் தலைவர் A.மணிராஜ்
அவர்கள், அனைத்து பணியாளர் சங்க மாநில மகளிர் அணி செயலாளர் நாமக்கல் சங்கீதா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

Also Read  மாநிலம் முழுவதும் போராட்டம் - TNRDOA

TNGOTS மாநில பொது செயலாளர். R.விஜயபாலன்,மாநில பொருளார் தூத்துக்குடி M.சங்கர்,மாநில தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணகிரி M.பொன்னையன்,.மாநில மகளிர் அணி இணை செயலாளர் குமரி S.கீதா.மாநில இணை செயலாளர் காஞ்சிபுரம் V.சங்கர், வேளாங்கன்னி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

கீழ்கண்ட கோரிக்கை
நிறைவேற்றப்பட்டது.

1.கிராம ஊராட்சியில்
பணிபுரியும் குடிநீர் மேல்நிலை
நீர்தேக்கத்தொட்டி
இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

2.கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்குமாதச்சம்பளம்ரூ10000
வழங்க வேண்டும்.

3.தூய்மை
பணியாளர்
காலி
யிடத்தை நிரப்பவேண்டும்.