தலைவரே…மாநகராட்சியோடு ஊராட்சிகளை இணைக்கும் பணி படு ஜோரா நடக்குது..
ஒற்றரே…இது அரசு அறிவித்த பழைய ஆணைப்படி இணைப்பு . சமீபத்தில் அறிவித்த அரசாணைப்படி புதிதாக தோற்றுவிக்க உள்ள நகராட்சி,மாநகராட்சிகளுக்கு நான்கு மாதத்திற்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
தலைவா…ஒரு பிடிஓ ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்கு.
யாரு அவரு ஒற்றரே…
வேலுநாச்சியார் மாவட்டத்தில் கோட்டை ஒன்றியத்தில் பணிபுரியும் பிடிஓ அலுவகத்திலும் போதையில் இருக்கிறாராம்…
பேரு என்ன ஒற்றரே…
பேரு வேண்டாம் தலைவா..புரியவேண்டிய அதிகாரிகளுக்கு தெரிந்தால் போதும். அதே அதிகாரி ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவராம்.
தண்டனை கிடைத்தும் திருந்தவில்லையா ஒற்றரே…
ஆமாம் பாஸ்…மீண்டும் சேட்டையை ஆரம்பித்துவிட்டாராம். பெண்களிடம் அநாகரியமாக பேசும் பழக்கம் தொடர்கிறதாம். அப்படிப்பட்டவருக்கு அவர் சார்ந்துள்ள சங்கம் சப்போர்ட் செய்கிறதாம்.
தவறு செய்பவர்களை காப்பாற்றும் செயலை சங்கங்கள் செய்யக்கூடாது ஒற்றரே…
ஆமாம் பாஸ்… சம்மந்தப்பட்ட அதிகாரி மீது சரியான நடவடிக்கையை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும் என சொல்லி விட்டு பறந்தார் ஒற்றர்.