மூன்று கட்ட போராட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

போராட்ட அறிவிப்பு

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் 24.02.2025 மாலை இணைய வழியே நடைபெற்றது..இதில் பின்வரும் ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்து 03 கட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது!

முறையான காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வலியுறுத்தி….

*மார்ச்-12 புதன்கிழமை ஒருநாள் மாநில அளவில் தற்செயல்விடுப்பு மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்_

*ஏப்ரல் 04- வெள்ளிக்கிழமை சென்னை ஊரகவளர்ச்சித்துறை ஆணையரகத்தில் பெருந்திரள் முறையீடு_

*ஏப்ரல்-21 திங்கட்கிழமை முதல் சென்னை ஊரகவளர்ச்சித்துறை ஆணையரகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது..பெரும்பாலானோர் இன்னமும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ள நிலையில் நடைபெற உள்ள போராட்டங்களில் அனைத்து ஊராட்சி செயலர்களும் தவறாமல் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

TNPSA-SRG-DGL-09-20
மாநில மையம்

Also Read  பி.செட்டிஹள்ளி ஊராட்சி - தரும்புரி மாவட்டம்