இந்தியாவில் முதன்மை இடம் – ஊராட்சி செயலாளர் சங்கத்தின் வாழ்த்துகள்

பிப்ரவரி-13 அன்று மாண்புமிகு மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி.சிங்பாகேல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள தேசிய அளவிலான தரவரிசையில் ஒட்டு மொத்த ஊராட்சிகளின் செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு 03 வது இடத்தையும்,திட்டங்களின் செயல்படுத்தும் விதத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளது

இந்த வியக்கத்தகு தர மதிப்பீடானது அரசியலமைப்பு அதிகாரங்களை நிறைவேற்றுவதற்கு ஊராட்சி அமைப்புகள் எவ்வளவு பங்காற்றியுள்ளன என்பதற்கான உறுதியான சான்று ஆகும்

ஊராட்சிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை செயல்படுத்தும் விதத்திலும் அதிகாரப்பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதத்திலும் முதலிடம் பெற்றுள்ளமைக்கு பிரதான காரணம் ஒவ்வொரு ஊராட்சி செயலர்களின் ஆத்மீகமான உழைப்பே ஆகும்.

மேலும் திறன்மேம்பாடு மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றில் இரண்டாவது இடத்தையும்,நிதிபரிவர்த்தணைகளை பொறுத்தவரை தமிழ்நாடு மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது கடும் உழைப்பால் நேர்ந்ததாகும்

இந்த பாராட்டு இன்று நேற்றல்ல..ஆண்டாண்டுகாலமாக வளர்ச்சித்துறை பணியாளர்களால் தொடர்ந்து தமிழகத்துக்கு வரப்பெறுபவை..

தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து நற்பெயரை தேடித்தர உழைத்துக்கொண்டுள்ள ஊராட்சி செயலர்கள் இணைந்து ஒத்துழைத்து வருகின்ற அலுவலர் பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்

தமிழ்நாடு அரசு மேலும் பல விருதுகளையும் பாராட்டுகளையும் குவிக்க இரவு பகல் பாராது உழைத்துவரும் நமது துறையின் மதிப்புமிகு ஆணையர் திரு.P.பொன்னையா இஆப,மதிப்புமிகு கூடுதல் தலைமை செயலாளர் திரு.ககன்தீப்சிங் பேடி இஆப மற்றும் மாண்புமிகு ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி BA,BGL உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்

Also Read  இணைய காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் ஊராட்சி

ஜான்போஸ்கோ பிரகாஷ்மாநில மையம்
TNPSA-SRG-DGL-09-20