ஊழல் நடைபெற அரசே காரணம் – உண்மையை சொன்ன ஊராட்சி தலைவர்

மக்களுடன் முதல்வர்

ஊழலுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு விடை தேடினால் அனுமார் வால் போல நீண்டு கொண்டே தான் செல்லும்.

ஆனா…ஊராட்சியில் நல்லாட்சி கொடுக்க வேண்டும் என நினைக்கும் சில ஊராட்சி தலைவர்களையும்,அதிகாரிகளையும் தப்பு செய்ய வைப்பதே அரசு தான் என ஆதங்கப்பட்டார் ஒரு ஊராட்சி தலைவர்.

மக்களுடன் முதல்வர், உங்கள் ஊரில் முதல்வர் என பெயரிடப்பட்டு ஊராட்சிகள் தோறும் நிகழ்ச்சிகளை நடத்த அரசு உத்தரவு போட்டுவிட்டது. அன்று நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசு தனியே நிதி ஒதுக்குவது இல்லை. நிகழ்ச்சி நடைபெற உள்ள ஊராட்சி மற்றும் அருகில் உள்ள ஊராட்சிகள் அந்த செலவை ஏற்கவேண்டும் என்கின்றனர்.

100ல் 10 ஊராட்சிகளில் தான் தன்னிறைவு பெற்று, நிதிநிலை போதுமானதாக இருக்கும். மற்ற ஊராட்சிகளின் நிலை பரிதாபகரமானது. ஆனாலும் கட்டாயம் பணம் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தப்படுவதால், போலி பில்களுக்கு பணத்தை ஊராட்சிக்கு நிதி வரும்போது எடுக்க வேண்டி உள்ளது என்றார் நம்மிடம்.

ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தினால், அதற்குரிய நிதிச்செலவிற்கு முதலில் வழிமுறைகளை வகுத்த பிறகே அமல்படுத்த வேண்டும். அரசே தவறு செய்ய வழிவகுக்க கூடாது.

Also Read  முருக்கம்பட்டு ஊராட்சி - வேலூர் மாவட்டம்