உள்ளாட்சி
இந்தியாவின் முதுகெழும்பு கிராமங்கள் என்றார் காந்தி. ஆனால், நகரமயமாக்கலை நோக்கி இந்தியா செல்வது என்பது அபாயகரமான செயல் ஆகும்.
தமிழ்நாட்டில் இதுவரை 12525 கிராமப்புற ஊராட்சிகள் இருக்கின்றது. நகராட்சி,மாநகராட்சிகளோடு சுமார் 500 கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பித்துவிட்டன.
உள்ளாட்சி தேர்தல் நடபெறுவதற்கு முன் இணைப்புக்கான பணிகள் முற்றிலும் முடிந்துவிடும். ஆக, இனி தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளின் மொத்த எண்ணிக்கையில் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் குறைந்துவிடும்.
அடுத்து என்ன?
இப்படி ஒவ்வொருமுறையும் ஊராட்சிகளை நகராட்சி, மாநகராட்சிகளோடு இணைத்தபடியே இருந்தால்,, கிராமமே இல்லாத இந்தியா என்ற அவலமான நிலையாகவே உருவாக்க்கூடிய சூழ்நிலையே வரும்.
இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அடுத்தகட்டத்தை நோக்கி செல்லவேண்டிய காலம் இது.
1. ஊராட்சிகளின் உட்கட்டமைப்பை உயர்த்த வேண்டும்.
2. ஊராட்சிகளின் நிதிநிலையை தன்னிறைவு பெறும்படி செய்தல் வேண்டும்.
3. பெரிய ஊராட்சிகளை இரண்டு அல்லது மூன்று ஊராட்சிகளாக பிரிக்க வேண்டும்.
4. பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி பகுதிகளை ஒட்டி உள்ள ஊராட்சிகளை அனைத்து வகையான அடிப்படை வசதிகளுடன் உயர்த்துதல் வேண்டும்.
இப்படி பல்வேறு விடயங்களை ஊரக வளர்ச்சித்துறை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். இல்லையேல், எதிர்காலத்தில் ஊரக வளர்ச்சித்துறை என்ற ஒன்று தேவைப்படாமலே போகலாம்.