தலைமைச் செயலாளராக தமிழர்

முருகானந்தம்

தமிழ்நாட்டில் மீண்டும் தலைமைச் செயலாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முருகானந்தம் இஆப அவர்களுக்கு இதய வாழ்த்துக்கள்.

எப்போதும் தமிழகம் சார்ந்தவர்கள்,பிற மாநிலத்தவர்கள் என உயர் அதிகாரிகள் மட்டத்தில் இரு பிரிவுகளாக இருக்கும்.

பெரும்பான்மையான முதன்மை பதவிகளில் வட மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளே பணியில் இருப்பார்கள். விதிவிலக்காக சில பதவிகளில் தமிழர் இருப்பர். இது இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் நடந்து வருகிறது.

இப்போதைய திமுக ஆட்சியில் மீண்டும் தமிழர் ஒருவருக்கு தலைமை செயலாளர் ஆக வாய்ப்பு கிடைத்துள்ளது.முதல்வர் அவர்களுக்கு தமிழினத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

இனக்குழு

தமிழக களத்தில் மற்றொரு பிரச்சனை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது, தமிழர்களுக்குள் தனித்தனி இனக்குழுக்கள்(சாதி) உண்டு. அந்த உணர்வு உயர் அதிகாரிகளுக்கும் பரவி உள்ளது. பதவிக்கு வந்த பிறகு, தான் சார்ந்த இனக்குழுவிற்கு தன்னால் முடிந்ததை செய்வது தவறில்லை.

அதே நேரத்தில் பிற இனத்தை சார்ந்த அதிகாரிகளை திட்டமிட்டு பழிவாங்கும் செயல் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நம்மிடம் கூறினார்.

அப்படி பழிவாங்கும் தமிழ் அதிகாரிகளை விட, பிற அதிகாரிகளே உச்ச பதவியில் வருவது நல்லது என பிற தமிழ் இனக்குழுவை சேர்ந்த அதிகாரிகளே நினைக்கும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது.

Also Read  தமிழகத்தில் கொரோணா அரசியல்

புதிதாக பொறுப்பேற்றுள்ள முருகானந்தம் இஆப அவர்கள் விருப்பு வெறுப்பு இன்றி அனைத்து தமிழ் இனக்குழுவை சார்ந்த அதிகாரிகளை இணைக்கும் பாலமாக செயல்படுவார் என நம்புகிறோம்.அவரை மனதார வாழ்த்துகிறோம்.