சேலத்தில் ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் சார்பாக இன்று ஊராட்சி செயலாளர்களின் ஒற்றை கோரிக்கையான தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கலை. சிவசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 200 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் எடப்பாடி கோபால்,மாவட்ட இணை செயலாளர் மேச்சேரி கருணாகரன்,மாவட்ட அமைப்பு செயலாளர் தலைவாசல் மணிகண்டன்,மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் தலைவாசல் மணிமாறன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரபாண்டி குமார் மற்றும் மாவட்டமகளிர் அணி செயலாளர் திருமதி மல்லிகா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வாழப்பாடி சரவணன் ,ஏற்காடு வேலு,மேச்சேரி சுப்பிரமணி, பனமரத்துப்பட்டி சீனிவாசன் உட்பட அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும் நம் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டுடனர்.முடிவில் தாரமங்கலம் ஒன்றிய தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.

Also Read  அந்தியூர் ஊராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்