முடியனூரில் மரக்கன்றுகள் நடும் விழா

வாழப்பாடி மார்ச் 20-

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனூர் கிராமத்தில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி ஒன்றியம் வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனூர் கிராமத்தில் கசிவுநீர் குட்டை மற்றும் விளையாட்டு மைதானம் பகுதியில் கிராம ஊராட்சி சார்பில் அடர்வனம் உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு, வேப்பிலைப்பட்டி ஊராட்சி செயலாளர் கலை.சிவசங்கர் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) தாமரைச்செல்வி தலைமை வகித்தார்.

வாழப்பாடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மாது (எ) வி. மாதேஸ்வரன் மரக்கன்றுகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா தங்கதுரை, துணைத் தலைவர் மணி, நெஸ்ட் அறக்கட்டளை தலைவர் முனைவர். பெ.பெரியார் மன்னன், திமுக மாவட்ட பிரதிநிதி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், பலன் தரும் 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.

திமுக நிர்வாகிகள் குமாரபாளையம் மாணிக்கம், வாழப்பாடி பன்னீர்செல்வம், சிங்கிபுரம் ரஞ்சித்குமார், தேவேந்திரன், முன்னாள் பால் கூட்டுறவு சங்க தலைவர் கலைஞானம் மனைவி தேவிகா மற்றும் மகளிர் குழுவினர், தூய்மை காவலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். வேப்பிலைப்பட்டி ஊராட்சியில் 500 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து, பசுமை ஊராட்சியாக மாற்றுவதென, கிராம பொதுமக்களும், மகளிர் குழுவினரும் தூய்மை பணியாளர்களும் உறுதி ஏற்றனர். நிறைவாக, பணித்தள பொறுப்பாளர் எஸ்.கலைச்செல்வி நன்றி கூறினார்.

Also Read  உதாரணமாக திகழும் ஊராட்சி செயலாளர் - பாராட்டுமா அரசு?