அமைச்சர் அலுவலகம் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாம் ஒற்றரே…
ஆமாம் தலைவா…எனக்கும் அந்த தகவல் கிடைத்தது. தமிழ்நாடு முழுவதும் தனிஅலுவலர் அதிகாரத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகாரிகளுக்கு உத்தரவு வந்துள்ளதாம்..
கொஞ்சம் விரிவாக சொல்லுங்க ஒற்றரே…
மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி என்பது கணிணிமயம் ஆக்கப்பட்டுவிட்டது.அதனால்,தனிநபர் தவிர, மனைப்பிரிவுகள் மொத்தமாக வரும் அனுமதிகளுக்கு மேலிடத்திற்கு குறிப்பிட்ட தொகை கொடுக்கவேண்டுமாம்.
அந்தந்த ஒன்றிய அலுவலர் அனுமதி தருகிறார்கள்.எப்படி மேலிடம் வரை ஒருங்கிணைக்கிறார்களாம் ஒற்றரே…
சரியாக கண்காணித்து,முறையாக செயல்படும் மாவட்ட அதிகாரிகள் மட்டுமே அதிகாரப் பணியில் தொடரலாம்.மறுப்பவர்கள் இடமாற்றம் செய்யப்படுவர் என தகவல் தலைவா…
டிடிசிபி மற்றும் பெருநகர குழுமங்களில் மட்டுமே இருக்கும் நடைமுறை,ஊராட்சிகள் வரையில் நீடிப்பது என்பது ஆளும்கட்சிக்கு கடும் கெட்டபெயரை ஏற்படுத்தும் ஒற்றரே…
அந்த உண்மை நிலையை முதல்வர் கவனத்திற்கு யார் கொண்டு செல்வது?.இதற்கு ஒத்துவராத அதிகாரிகள் மாற்றம் செய்யப்படலாம் என அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது தலைவா…
தனிஅலுவலர் இல்லாத மீதம் உள்ள மாவட்டங்களில் என்ன நிலை ஒற்றரே…
ஆளும்கட்சி சார்பில்லாத விவரமான ஊராட்சி தலைவர்களிடம் இவர்களின் திட்டம் செல்லுபடி ஆகாது.ஆனாலும், பணம் பதாளம் வரை பாயும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.