விரைவில் ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படும் – ஒற்றர் ஓலை

விரைவில் அறிவிப்பு வருமா ஒற்றரே…

நிச்சயமாக வரும் தலைவா..சுமார் 1300 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிகிறது. அறிவிப்பு வந்த பிறகு, இட ஓதுக்கீடு உட்பட அடிப்படை பணிகள் ஆரம்பம் ஆகும்.

எந்த முறையில. தேர்வு இருக்கும் ஒற்றரே…

கடந்த அதிமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட நடைமுறை தொடரும் என்கிறார்கள். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு தொடங்கி,நேர்முக தேர்வு என பல படிமங்களில் நடைபெறும் தலைவா…

அப்படியெனில், தகுதி உள்ளவர்களுக்கு பணி கிடைக்கும் என சொல்லும் ஒற்றரே…

உங்களை நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது. எந்த காலத்தில் இந்த கேள்வியை கேட்கிறீர்கள் தலைவா…கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் 10 லட்சம் வரை விலை போன ஊராட்சி செயலாளர் பதவி.இந்த முறை இரண்டு மடங்காக உயரலாம்.

நேர்முக தேர்வு என்பதெல்லாம் கண்துடைப்பாக மட்டுமே இருக்குமா ஒற்றரே…

ரைட்டில் இன்டிகேட்டர் போட்டு, லைப்டில் கை காட்டி, நேராக செல்லும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் நேர்மையை எதிர்பார்ப்பது சரியா தலைவா…

சரியா சொன்னீர் ஒற்றரே…எப்படியோ காலி பணியிடங்களை நிரப்பினால் சரி.

இனி வரும் காலம் கரை வேட்டிகளின் பொற்காலம் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  நடுவூர் ஊராட்சி - தஞ்சாவூர் மாவட்டம்