தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…
1.கிராம ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு பத்து ஆண்டு,இருபது ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்*.
2.கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் 35ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகிறார்கள்*
இரவு முழுவதும் மோட்டாரை இயக்கி காலை மாலை கிராமபொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்கின்றனர் அவர்கள் தற்போது 5200சம்பளம் பெறுகின்றனர் அவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.ஓய்வு ஊதியம் 5000, பணிக்கோடை இரண்டு இலட்சம்வழங்க வேண்டும்.
3.தூய்மை பணியாளர்களுக்கு தற்போது சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கபடுகிறது.
அதை காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும்.ஓய்வு ஊதியம்5000வழங்க வேண்டும்.பணிக்கொடை இரண்டு இலட்சம் வழங்கவேண்டும் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
4.கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு தற்போது சம்பளம் ரூ5000 வழங்க படுகிறது.அதை10000/- மாக வழங்க வேண்டும்.ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.
ஆர்.சார்லஸ் மாநில தலைவர்
K.ரவிமாநில பொது செயலாளர்
V.குமரேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
S.பெரியசாமி
மாநில பொருளாளர்,தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.