பிடிஓ மீது பாலியல் புகார்,உண்மை என்ன? ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…திடுக்கிடும் செய்தியா?

ஆமாம் தலைவா..சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது பாலியல் குற்றச்சாட்டு என காட்சி ஊடகங்களில் செய்தி வந்த வண்ணம் உள்ளது.

அங்கு என்ன நடக்கிறது ஒற்றரே…

அங்கு பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் பலரிடமும் கேட்டேன். அங்கு நடப்பது வேறு என்கின்றனர். புகார் கொடுத்துள்ள பெண் ஊராட்சி செயலாளர் பெரிய ஊராட்சியில் இருந்து சிறிய ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யபட்டாராம்.சம்மந்தப்பட்ட ஊராட்சிக்கு வந்த பிடிஓ செயலாளர் அங்கு இல்லாது கண்டு அவரை கைபேசியில் அழைத்துள்ளார் தலைவா…

அதன்பிறகு என்ன ஆனது ஒற்றரே…

ஊராட்சியில் தான் இருக்கிறேன் என செயலாளர் கூற,அப்படியெனில் வீடியோ காலில் வாருங்கள் என பிடிஓ கூறினாரம். அந்த உரையாடலை வைத்து மாவட்ட அதிகாரியிடம் ஊராட்சி செயலாளர் புகார் கொடுத்தாராம் தலைவா…

பிடிஓ தவறு செய்தாரா என விசாரனை நடந்தா ஒற்றரே..

அதன் மேல் விசாரனை நடக்கிறதாம். அதே வேளையில்,ஊராட்சி செயலாளர் பணிபுரிந்த பழைய ஊராட்சியின் வரவுசெலவு கணக்கை சரிபார்த்து வருவதாகவும்,அதன்பொருட்டு பிடிஒவை ஒரு நபர் போனில் மிரட்டி உள்ளாராம். அதனை வைத்து பிடிஓ புகார் அளித்துள்ளராம் தலைவா…

Also Read  அனைத்து ஊழியர்களின் உள்ளம் கவர்ந்த திட்ட இயக்குநர்

யார் மீது தவறு என்றாலும் தண்டிக்க வேண்டும் ஒற்றரே…

சரியாக சொன்னீர்கள்…இரண்டு பேரும் தங்கள் பக்க நியாயத்தை சொல்கிறார்கள். எது உண்மை என விசாரித்து மாவட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்