யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் ஊராட்சி செயலாளர் மகன் தேர்ச்சி

தேர்வு முடிவு

யுபிஎஸ்சி குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 11) வெளியிடப்பட்டன.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், முடிவுகள் புதன்கிழமை வெளியாகின.

முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சியடைந்தவா்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தோ்வு நடைபெற உள்ளது. இதற்காக தோ்வா்கள் மறுபடியும் விரிவான விண்ணப்பத்தை ஜூன் 16 முதல் 25-ஆம் தேதிக்குள் தோ்வாணய வலைதளத்தில் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊராட்சி செயலாளர்

ஊரக வளர்ச்சி துறையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலாளரும், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில பொருளாளருமான மகேஷ்வரன் அவர்களின் இளைய மகன் சரண் அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அடுத்து நடைபெற உள்ள முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்விலும் வெற்றி பெற நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

Also Read  பருவதனஅள்ளி ஊராட்சி- தருமபுரி மாவட்டம்