ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைக்ககோரி ஆர்ப்பாட்டம் – சேலம் மாவட்டதலைவர் கலை. சிவசங்கர் அறிக்கை

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் கலை.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…..

தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்ககோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்ககோரி சங்க மாநில நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் பேரில் வருகிற 21ஆம் தேதி (புதன்கிழமை ) தற்செயல் விடுப்பு எடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இதைபோல சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இதன் பிறகு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் செப்டம்பர் 27-ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல்மாளிகை முன்பு மாநில அளவிலான பெருந்திரள் முறையீட்டு இயக்கம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read  பூதநத்தம் ஊராட்சி - தர்மபுரி மாவட்டம்