எல்லை மீறும் வாழப்பாடி பிடிஓ- ஒற்றர் ஓலை

சேலம் மாவட்ட தகவலா ஒற்றரே..

ஆமாம் தலைவா…சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முருக கடவுள் பெயர் கொண்ட பிடிஓ ஒருவர் இருக்கிறார். அவரின் செயல் எல்லை மீறி செல்கிறதாம்.

என்ன நடக்கிறது ஒற்றரே…

தனக்கு கீழே பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் தரக்குறைவாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளாராம். குறிப்பாக, பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தம் வரும் வகையில் பேசுகிறாராம்.

பெண்கள் பாதுகாப்பே முதன்மை என சொல்லும் ப்ரோ ஆட்சியில் இந்த நிலையா ஒற்றரே…

ஆமாம் தலைவா…அந்த பிடிஓ முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உறவாம். பழைய அடாவடியான அதிகாரத்தை தவெக ஆட்சியிலும் தொடர்கிறாராம். இவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில்,விசயம் விபரீதமாக மாறிவிடும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  இஆப இடமாறுதலும் - ஊரக வளர்ச்சித் துறையினர் புலம்பலும் - ஒற்றர் ஓலை