பிடிஓ பாஸ்கரனுக்கு ராயல் சல்யூட் – ஒற்றர் ஓலை

பாஸ்கரனுக்கு ராயல் சல்யூட்…

என்ன ஒற்றரே…எதுக்கு ராயல் சல்வூட்.

தலைவா…பெண் ஊழியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் தேவகோட்டை பிடிஓ பாஸ்கரன் பற்றி தொடர்ந்து பேசிவந்தோம் அல்லவா..

ஆமாம் ஒற்றரே…அவரை எதிர்த்து சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்பாட்டமும் நடந்தது.

ஆமாம் தலைவா…அதனையும் நமது செய்தி இணைய தளத்தில் செய்தியாக வந்தது.அதனை அமைச்சர் அலுவலகம் வரை  கொண்டு சேர்த்தோம்…

நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டதா ஒற்றரே…

மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் மீது விசாரனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இட்டுள்ளார்.பாஸ்கரன் குற்றம் செய்யவில்லை என அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தரப்பு கூறி வருத்தப்பட்டனர்.

இதற்கு முடிவே கிடையாதா ஒற்றரே..

பாஸ்கரனை பார்த்து உச்ச அதிகார மையம் கூட நடவடிக்கை எடுக்க அச்சப்படுவதாக தெரிகிறது.அதனால் தான் பிடிஓ பாஸ்கரனுக்கு ராயல் சல்யூட் என்று சொன்னேன் தலைவா..

சரி தான்..இனி அவரின் ஆட்டம் அளவில்லாமல் போகும் தானே.

ஆமாம் தலைவா…இனி சம்மந்தப்பட்ட பெண் ஊழியர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக போகும்.இனி அவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஊராட்சிகளில் ஆன்லைனில் அனைத்து வரிகளையும் கட்டுவது எப்படி?