துணை முதல்வருக்கு அனைத்து பணியாளர்கள் சங்கம் கடிதம்

சார்லஸ் ரெங்கசாமி
சார்லஸ் ரெங்கசாமி

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்-கிராம ஊராட்சியில் பணிபுரியும்vprc,plf
கணக்காளர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு 

தொடர்பாக அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக துணை முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறி உள்ளதாவது…

தமிழ் நாட்டில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் உள்ளனஅதில் ஒவ்வொரு ஊராட்சிக்கும்vprc(கிராம வறுமைஒழிப்புசங்ககணக்காளர்,PLF (ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கண்காளர்கள்) தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 2007ம்ஆண்டுமுதல் பணிபுரிந்து வருகின்றனர்,

இவர்கள் ஊராட்சியில் உள்ள மகளீர்குழுவிற்கு கடன் வழங்குதல்,மாற்றுத்திறனாளிகள் நலிவுற்றோருக்கு உதவிகள் வழங்குதல்,இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல்,முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தில் பணிபுரியும் மைய பொறுப்பாளர்கள், ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், பள்ளியில் பணிபுரியும் யும் தூய்மை காவலர்கள்,

சுகாதார ஊக்குனர்கள், ஊராட்சி கணிணிஇயக்கனர்கள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள்(CRP,
CBS,CST,MTM) பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல்அதற்கான பதிவேடுகள் பராமரித்தல்,மற்றும் அரசுநலதிட்டங்களைமக்களிடம் எடுத்துச் சொல்லுதல் போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள்

மேற்கண்ட வேலைகளை செய்து வரும்VPRC,PLF கணக்காளர்களுக்கு குழுவிற்கு வழங்கும் கடன்தொகையில் வசூல் ஆகும் வட்டியில் இருந்துமாத ஊதியமாக 2000வழங்கப்படுகிறது.

கடன் வசூல் ஆகாத 7000ஊராட்சிகளில் பணிபுரியும்VPRC,PLF கணக்காளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காமல் பணிபுரிந்து வருகின்றனர் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு தனி நிதி ஒதுக்கீடு செய்து மாதச்சம்பளம்
ரூ10000 வழங்கும்படி கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Also Read  ஏப்ரல் 5-9-9 @ கொரொனா

ஆர்.சார்லஸ் மாநில தலைவர்
K.ரவி மாநில பொதுச்செயலாளர்
V.குமரேசன் மாநில ஒருங்கினைப்பாளர்
S.பெரியசாமி
மாநில பொருளாளர்
தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.