வாலு போயி கத்தி வந்தது- ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…பழமொழியோடு ஆரம்பிக்கிறீர்.

ஆமாம் தலைவா…தூய சக்தின்னு ஆட்சி வந்தவர்கள் செய்யும் செயலை பார்த்தால் இவர்களுக்கு அவர்களே பரவாயில்லை என நினைக்க தோன்றுகிறது.

என்ன விசயம் ஒற்றரே…

கடந்த ஆட்சியில் 7 சதவீதமாக இருந்த கமிசன் தொகையை பத்தாக மாற்றி விட்டதாம் தூய சக்தி. இந்த ஆட்சியிலும் மருமகனின் ஆதிக்கம் ஆரம்பித்து விட்டதாம் தலைவா…

ஏற்கனவே அந்த செய்தி உலாவருகிறது ஒற்றரே..

அதுமட்டுமல்ல தலைவா…தமிழ்நாடு முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை தூய சக்தியின் ஒன்றிய நிர்வாகிகள் மிரட்டும் தொனியில் செயல்பட்டு வருகிறார்களாம்.

இந்த செய்தியை மேலிடத்திற்கு கொண்டு சேர்ப்போம் ஒற்றரே…

சரி தலைவா…ஊரக நிர்வாகத்தில் நடபெறும் செயல்கள் பொதுமக்களை உடனடியாக சென்றடையும். உள்ளாட்சி தேர்தலில் அது எதிரொலிக்கும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஊழல் நடைபெற அரசே காரணம் - உண்மையை சொன்ன ஊராட்சி தலைவர்