என்ன ஒற்றரே செய்தி…
திட்ட இயக்குநரில் இருந்து கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு ஆணை எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் தலைவா..
அதில் ஏதாவது சிக்கலா ஒற்றரே..
சிக்கல் இல்லை ஒற்றரே…அரசாணைக்கான கோப்பு தலைமை செயலகத்தில் தேங்கி இருக்கிறதாம். பழைய துறை செயலாளர் வடநேர இருந்தவரை எந்த கோப்புகளும் விரைவாக வருவதில்லை. புதிய செயலாளர் வந்த பிறகு கோப்புகள் வேகம் எடுத்துள்ளதால் விரைவில் அரசாணை வரும் என தெரிகிறது.
வேறு செய்தி உண்டா ஒற்றரே…
இந்திய ஆட்சி பணியாளராக பதவி உயர்விற்காக சில கூடுதல் இயக்குநர் எதிர்பார்த்து இருக்கிறார்களாம். அதிகார மையம் யாருக்கு பச்சை கொடி காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது தலைவா.
உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா ஒற்றரே…
அதிகார மையத்திற்கு ஆலோசனை சொல்லும் குழுவில் யாராவது ஒருவர் மனது வைத்தால் மட்டுமே நடக்கும்.அதிலும், மொழி வழி இனத்தவர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பது சுலபம் என்கிறார் ஆலோசனை வட்டத்தை அறிந்த சோர்ஸ் ஒருவர்.
எந்த மொழி ஒற்றரே…
தமிழை தவிர பிற மொழியாளருக்கே வாய்ப்பு அதிகம் என சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.























