ஊராட்சி தலைவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தோல்வி அடைந்தவர்கள்- ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே செய்தி…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம் கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சியில் தான் தொடர்ந்து தொல்லை தலைவா…

தோல்வி அடைந்தவர்களின் செயலா ஒற்றரே..

ஆமாம் தலைவா…மக்கள் மத்தியில் தேர்தலில் நின்று தோற்று விட்ட ஒருவர் தொடர்ந்து 5 ஆண்டு காலமாக அந்த ஊராட்சி நிர்வாகத்தை நடத்தவிடாது தொல்லை கொடுத்து வருகிறாராம்.

அவர் நேர்மையாக மக்களுக்கு பாடுபடும் நபரா..

அந்த ஊரில் விசாரித்தேன் தலைவா…தோல்வியை தாங்கமுடியாது தொடர்ந்து தொல்லை கொடுக்கிறராம்.அவரோடு இன்னும் சிலபேர்கள் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனராம்.அவர்களுக்கு வழிகாட்டியாக அதே ஊரை சேர்ந்த நகராட்சி துறையில் சென்னையில் பணிபுரியும் ஒருவர் இருக்கிறாராம்.

வேறு தகவல் ஒற்றரே…

அந்த சிலபேரில் ஒருவரின் மனைவி செவிலியராக சிவகங்கை மாவட்டத்தில் பணிக்கு சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில்,சொந்த மாவட்டத்திற்கு இடமாறுதலுக்காக தற்போதைய ஆளும்தரப்பை அணுகி கொடுப்பதை கொடுத்து இடமாறுதல் வாங்கிவிட்டாராம். 3 ஆண்டுகளுக்கு பிறகே இடமாறுதல் என்ற நெறியை உடைத்து இடமாறுதல் வாங்கி உள்ளாராம்.

இந்த செய்தி சம்மந்தப்பட்ட துறைக்கு செல்லட்டும்.அதன்மீதான நடவடிக்கையை அறிந்து வாருங்கள் ஒற்றரே…

சிவகங்கை திருப்பத்தூர் வட்டாரத்தில் பணிபுரியும் அவரின் மனைவியரின் இடமாறுதல் விசயத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் தலைவா. சில நாட்களில் இன்னும் பல தகவல்களோடு வந்து சந்திக்கிறேன் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  செம்மாம்பாடி ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்