தென்காசி
மாவட்ட திட்ட இயக்குநராக பணியேற்ற போது நமது செய்தி இணையதளத்தின் சார்பாக செல்லும் இடமெல்லாம் சிறப்பு சேர்க்கும் திட்ட இயக்குநர் சிவராமன் அவர்கள் என குறிப்பிட்டு இருந்தோம்.
நமது எழுத்திற்கு நியாயம் சேர்க்கும் வண்ணம் ஒரு தகவல் நம்மை வந்து சேர்ந்தது.
தென்காசி மாவட்டம்,கடையம் ஒன்றியத்தில் கீழகடையம் ஊராட்சியில் நரையப்பபுரம் காளியம்மன் கோவில் பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகளமாக குடிதண்ணீருக்காக பல்வேறு இடங்களில் கோரிக்கைகள் வைத்து வந்தனர் அந்த பகுதி மக்கள்.
சில மாதங்களுக்கு முன் தென்காசி திட்ட இயக்குநராக பதவி ஏற்ற சிவராமன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். பத்தோடு பதினொன்றாகத் தான் என நினைத்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சி நடந்தேறியது.அவர்கள் கொடுத்த கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு,துரிதமாக பணிகள் நிறைவேறி விட்டது. 18ஆண்டுகால கனவு நிறைவேறி விட்டதாக நம்மிடம் பேசினர் அந்த பகுதி மக்கள்.

தென்காசி திட்ட இயக்குநர் சிவராமன் அவர்களுக்கு நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள். அவரின் மக்கள் பணி தொடரட்டும்.




























