எங்கே மாறுதல் ஒற்றரே…
சிவகங்கை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் வர உள்ளதாக செய்தி வருகிறது.
வழக்கமான செயல்பாடுதானே ஒற்றரே…
ஆமாம் தலைவா…ஆனா, இந்த மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சங்கத்தினர் சொல்வது மட்டுமே நடக்கிறதாம். உதவியாளர் இடமாறுதலில் கூட அந்த சங்கத்தினரின் தலையீடே அதிகம் என்கின்றனர்.
சிவகங்கையும் பிரச்சனையும் பிரிக்க முடியாது போல ஒற்றரே..
ஆமாம் தலைவா…மற்ற சங்கத்தினர் மனவருத்தில் உள்ளனராம். இந்த வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாறுதலாவது எந்த தலையீடும் இல்லாது நேர்மையாக நடைபெறுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அடுத்தகட்ட நிலவரத்தை அறிந்து வாருங்கள் ஒற்றரே…
கண்டிப்பாக தலைவா…சிவகங்கை தகவல்களை சிறப்பான முறையில் கண்காணித்து வருகிறேன் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.



























