நாய் வேட்டை,அடுத்து… – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே..காமெடி செய்தியா…

காலையில் எழுந்த உடன் வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனம் அந்த ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிக்கு செல்கிறது. அவர் அங்கு வந்து சேர்வதற்கு முன்பே ஊராட்சி செயலாளர் உட்பட அந்த ஊராட்சியில் பணி புரியும் அனைவரும் தயாராக உள்ளனர்.

எதற்காக ஒற்றரே…

நாய்களை பிடித்து கருத்தடை செய்வதற்கான பணிகளை செய்ய தலைவா…

என்ன கொடுமை ஒற்றரே…ஊரக வளர்ச்சி துறை வேலையா இது.

இத்தோடு இது முடியப்போவது இல்லை தலைவா…அடுத்து பன்றி பிடிப்பது,குரங்கு பிடிப்பது என வேலைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகப்போகிறது தலைவா..

பரிதாபமான துறைதான் ஒற்றரே..

ஆமாம் தலைவா…சரியா படிக்கலைனா பன்றி மேய்க்கத்தான் போவ என பெற்றோர்கள் சொல்வார்கள். மெத்த படித்த பிடிஓ கூட நாய் பிடிப்பது,பன்றி பிடிப்பது என செய்வதை நினைத்தால் வேதனையாக தான் உள்ளது தலைவா…

மற்ற துறைகளின் வேலைகளை இவர்கள் மீது சுமத்தும் உயர் அதிகாரிகளை என்ன செய்வது ஒற்றரே..

மாநில அதிகாரிகளை மாதத்திற்கு ஒரு நாள் ஏதாவது ஒரு ஊராட்சியில் நாய் பிடிக்க சொல்லவேண்டும்.அப்போது தான் குளுகுளு அறையில் உட்கார்ந்து இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டார்கள் தலைவா…என நக்கலாக கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஒரப்பம் ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்