இரவு பேச்சு
ஒரு நாள் இரவில் நாட்டுமக்களுக்கு செய்தி சொல்லப்போகிறேன் என்றார். ஆவலோடு அனைவரும் காத்திருந்தோம்.
பண மதிப்பிழப்பு என்று அணு குண்டை தூக்கிப் போட்டார். கிராமப் பொருளாதாரம் கூட ஆடிப்போனது.
அடுத்த முறை…
கொரொனாவிற்கு எதிராக ஜனதா ஊரடங்கு என்றார். உயிர் பயம் வந்து போனது.
இன்று இரவு…
என்ன சொல்லப்போகிறார் என்ற எண்ணம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.
ஆனால்…இந்த அறிவிப்பு மக்களை காப்பதற்கான செய்தியாக மட்டுமே இருக்கும்.
அவர் சொல்லும் செய்தியை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்ததே ஆகும்.
குறிப்பாக…கிராமப்புறங்கள் நிறைந்த நாட்டில்,உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கே கூடுதல் பொறுப்பு உண்டு.