இராஜபாளையம்
கொரோனாவின் எதிரொலியால் பொதுமக்களுக்கும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் மற்றும் கா்ப்பிணிப்பெண்களுக்கும் அரசு பொது மருத்துவமனைகளிளும் சாலையோர வழிப்போக்கர்களுக்கும் அல்லும் பகலும் பணி செய்த நகராட்சி தூய்மைபணியாளருக்கும் ஆதிவழிவிடும் விநாயகர் கோவிலில் இருந்து முறையான சமையல் வல்லுனர்களால் தக்காளிசாதம் சாம்பார்சாதம், சக்கரை பொங்கல், வெண்பொங்கல், டீ, பழங்கள், சுகாதாரமான மினரல்வாட்டர் ஆகியவைகளுடன் இராஜபாளையம் வருவாய் வட்டாசியர் காவல்துறை துணைகண்காணிப்பாளரும், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுடைய மேற்பார்வையில் மற்றும் பொதுமக்களுடைய நல்ல எண்ணத்தில் அவர்களின் உதவியுடன் இன்று 5வது தினமாக 3000 மக்களுக்கு தா்மாபுரம் ஶ்ரீமாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக வழங்கி உள்ளனர்.
மேலும்
இராஜபாளையம் நகரில் கொரோனா வைரஸ் என்கிற தொற்று நோய் மக்களை தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முறையான அரசு மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில்
அதிநவீன மருந்து தெளிப்பான் (ஜெர்மன்) இயந்திரம் உதவியுடன் 30000 லிட்டர் தண்ணீரில் மருத்துவ உபகரணங்களுடன் நகர் முழுவதும் நோய்க்கிருமிநாசினி மருந்தான Most Bloom SprayerDisinfectant(Didecyldimethyl ammonium chloride,Glutoraldehyde,Citric acid combination) நகரில் மிகவும் நல்ல முறையில் தெளிக்கபட்டன,
இந்தியாவிலேயே முதல் முறையாக இராஜபாளையம் நகரில் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் முறையான ஆலோசனைப்படி Most Bloom Sprayer மூலம் Disinfectant அடிக்கப்பட்டது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
கொடூர அரக்கன் கொரொனாவை தடுக்க நவீனத்தை பயன்படுத்திய ராஜபாளையம் நற்பணி மன்றத் தோழர்கள் பாராட்டுக்குரியவர்கள்.