கொரொனா தடுப்பு மருந்து-சித்த மகத்துவம்

உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் தங்கள் பஞ்சாயத்தில் விநியோகிக்கலாம்.

கபசுரக் குடிநீர்

நிலவேம்பு கஷாயத்தின் பெருமைகளை இப்போதுதான் பலரும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல், மக்களுக்குத் தெரியாத ஓர் அற்புத மருந்துதான் கபசுரக் குடிநீர். அரசு மருத்துவமனைகளின் சித்த மருத்துவப் பிரிவுகளில் வழங்கப்பட்டு வரும் கபசுரக் குடிநீரின் பயன் பற்றி சித்த மருத்துவர் கலைமணியிடம் கேட்டோம்.‘‘கபம் என்ற சொல் சளியையும், சுரம் என்ற சொல் காய்ச்சலையும் குறிக்கும்.

 

அனைவரைக்கும் ஏற்றது:

 குழந்தை தொடங்கி, வயதானவர் வரை என அனைவரையும் எதுவும் செய்யவிடாமல், முடக்கிவிடும் தன்மை கொண்ட கபசுரத்தைக் குணப்படுத்த உதவும் மருந்து என்பதன் பொருள்தான் இந்த கபசுரக் குடிநீர்.நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி ஆகியவற்றை யும் போக்கும் திறன் கொண்டது.

 

நாட்டு மருந்து கடைகளில்

ஆடாதொடை இலை, சிறு தேக்கு, கரிசலாங்கண்ணி, சுக்கு, ஆடுதீண்டா பாலை வேர், பேராம்பல், மிளகு ஆகிய மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் கொண்டு இந்த கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் இது பொடியாகவும் கிடைக்கும். நிலவேம்பு கஷாயம் செய்வது போலவே கொதிக்க வைத்து சுண்டிய பிறகு வடிகட்டிக் குடிக்கலாம்.

 

Also Read  மூக்கு அவ்வளவு முக்கியமா...
கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது :

 குழந்தைகளுக்கு 15 மில்லி லிட்டர் கஷாயத்தில் தேன் கலந்து ஒரு ஸ்பூன் தினமும் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும். பெரியவர்கள் ஒருவேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். கர்ப்பிணிகள் கபசுரக் குடிநீரைத் தவிர்ப்பது நல்லது.

கொரொனாவிற்கு சிறந்த தடுப்பு மருந்தாக,எதிர்ப்பு சக்தி தரும் மாமருந்தாக கபசுரக் குடிநீர் உள்ளதாக உலகமே ஒத்துக்கொள்ளும் காலம் கனிந்து வருவதாக சித்த மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.

இதை உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் தங்கள் பஞ்சாயத்தில் விநியோகிக்கலாம்.

தமிழன்…

உலகிற்கே பண்பாடு,கலாச்சாரம் மட்டுமல்ல மருத்துவத்தையும் அளிக்கும் ஆளுமை நிறைந்தவன்.