பூண்டு – உணவே மருந்து தினமும் அருந்து

நல்ல மருந்து

பூண்டு  வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும்.

   பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது.

சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.

வெள்ளைப்பூண்டின் மாபெரும் சிறப்பு நோய்க்கிருமிகளை உடனுக்குடன் அழிப்பது. 400 விதமான இரசாயனப் பொருட்கள் வெள்ளைப்பூண்டில் கலந்துள்ளது என்று மருதுவம் கூறுகிறது.

இந்த 400 இரசாயனப் பொருட்களில் பெரும்பாலானவை உடல் திசுக்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்து உடலை இளமைத் துடிப்புடன் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளது என்கிறார் ஆய்வாலர்கள்…!

ஆயுர்வேத மருத்துவத்தில் முடி நன்கு வளரவும், வெண்புள்ளிகள் மறையவும் தினமும் வெள்ளைப் பூண்டு சாப்பிடச் சொல்கின்றனர்.

பாக்டீரியாக்களை அழிக்கவல்ல பெனிசிலின் அல்லது ‘டெட்டிராசிலின்’ ஆகிய மருந்துகளில் சக்தி வாய்ந்த, பூண்டில் உள்ள ‘அலிசின்’ என்ற பொருள் உள்ளது. காசநோய், டைபாயிட் முதலிய நோய்களின் கிருமிகளை அலிசின் அறவே ஒழித்துவிடுகிறது.

ஐந்து பூண்டுப் பற்களை எண்ணெயில் வதக்கி தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. சமையலில் அதிகம் சேர்க்கவும். மூன்று பூண்டுப் பற்களைப் பாலில் காய்ச்சி அருந்திவிட்டு இரவில் படுப்பது நல்லது.

பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

Also Read  நீர்முள்ளி- நோய் தீர்க்கும் நம்ம மருந்து

பூண்டில் உள்ள சல்ஃபர் உப்பு ஆரோக்கியமான தோல், முடி, நகங்கள் பெற உதவுகிறது.

உடலில் உள்ள குப்பைகளையும் விஷமான பொருட்களையும் உடனே வெளியேற்ற உதவுகிறது. தோல் சுத்தமாக, பளபளப்பாக, ஒளிரும் விதத்தில் பாதுகாக்கிறது. அதற்காக B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களுடன் இணைந்து தோலை மிகவும் ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது. கல்லீரலின் பணிகளும் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.

சல்ஃபர் உப்பைப்போலவே அயோடின் உப்பும் பூண்டில் அதிகம் உள்ளது. தைராய்டு சுரப்பியில்தான் அயோடின் உப்பு சேமிப்பாக உள்ளது.

இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் உப்பு குறைந்தால் ‘தைராக்ஸின்’ சுரப்பது குறையும். வளர்சிதை மாற்றத்திலும் திசுக்கள் ஆக்ஸிஜனை உபயோகித்துக் கொள்வதிலும் தைராக்ஸின்தான் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது.

இதனால் இதயம் சீராகத் துடிக்கிறது. சிறுநீர் மூலம் கால்சிய உப்புக்கள் வெளியேறவும் உதவி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மூளையை விழிப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

எனவே, தினமும் 5 பூண்டுப் பற்களாவது சாப்பிடுங்கள். மீன், முட்டை போன்றவைகூட சாப்பிடாத சைவ உணவுக்காரர்களுக்கு இந்த அயோடின் உப்பு வெள்ளைப்பூண்டு மூலம்தான் நன்கு உடலுக்குக் கிடைக்கிறது.

பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.

குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.  பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும்.
எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

Also Read  சர்க்கரை வேம்பு-இனிக்கும் வேப்பிலை

   உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

பூண்டு தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.

இதய அடைப்பை நீக்கும், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்,

ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும்.

பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றி விடும். தொண்டை சதையை நீக்கும்.
எனவே என்றென்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்…!

நோய் வரும் முன் காக்காப்பது சிறப்பு வந்த பின் பாக்கலாம் என்றால் அது மருத்துவருக்கு சிறப்பு…

ஆகவே
“உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையிலே”
அன்புடன் உங்கள் சங்கரமூர்த்தி..
7373141119

இந்த இணையக் குழு பற்றி தெரிந்து கொள்ள..