ஏர்வாடி ஊராட்சி – அரசு பள்ளி மாணவ குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்*

ஏர்வாடி ஊராட்சி

கடலாடி ஒன்றியம், சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள்

கடலுக்கு சென்று மீன் பிடித்தல், 100 நாள் வேலை மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

அவர்கள், அரசு அறிவித்த ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆகவே பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, மனோன்மணி, அம்பேத்குமார், தங்கமணி, முருகேசன், சரண்யா ,ஜெயராணி,கொசிஜின் ஞானாயுதம் ஆகிய ஆசிரியர்கள் இணைந்து ரூபாய் 40,000 நன்கொடையில்

பெற்றோர்களுக்கு கோதுமை, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, கடலை எண்ணெய் போன்ற மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் முகக் கவசம் போன்ற பொருள்களை நிவாரண தொகுப்பாக இன்று வழங்கினர்.

மேலும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசுரம் போன்றவற்றையும் வழங்கி ஆரோக்கியத்துடன் வாழ தலைமை ஆசிரியர் அறிவுரை கூறினார்.

ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் செய்யது அப்பாஸ் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சமூக இடைவெளி விட்டு வாழ்ந்து கொரோனோ நோயிலிருந்து விடுபட பெற்றோர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஆசிரியப் பயிற்சி விரிவுரை யாளர் சண்முகவேல், ஆசிரியர் முத்துசாமி, ஊராட்சி மன்ற செயலர் அஜ்மல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவி முத்துராணி,

Also Read  கட்டனூர் ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்

மன்னார் வளைகுடா காப்பக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, பேடு தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராம்கி ,பானு, மகேஸ்வரி, மாலா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

எங்கள் முகநூல் பக்கம்

மேலும் செய்திகளுக்கு