சுத்தமான குடிநீர்-அயன்கொல்லங்கொண்டான் தலைவர் உறுதி

சுத்தமான,சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான கழிப்பறைகள்…,!

இதுவே எங்களது முதல் கடமை, என்று நமது “tnபஞ்சாயத்து செய்தி” யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

 விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அயன் கொல்லங்கொண்டான், ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்ற வெள்ளைத்துரை.

மேலும் அவர் நமது நிருபரிடம் கூறிய போது:- எங்களது ஊராட்சி மன்ற வார்டுகள் மொத்தம் ஆறு,

எங்களது பகுதிகளில் உள்ள கம்மாயில் (குளம்) இருந்து தான் குடிநீருக்காக ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் கிடைக்கிறது.

  அதுவும் சரியான ரீதியில் கிடைக்காத காரணத்தால், சுத்தமான குடிநீருக்கு போராட வேண்டியுள்ளது.

நல்லகுடிநீர் கிடைக்கச் செய்யும் வகையில் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

  மேலும் திருமண மண்டபமாக ஒரு சமுதாய கூடத்தை உருவாக்க வேண்டும், சாக்கடைகளை செப்பனிட வேண்டும், கண்மாயை தூர்வார வேண்டும்,

தெருவிளக்குகள் எப்போதும் சரிவர இயங்க வேண்டும்.

மேலும் எங்களது ஊர் பள்ளியில் உள்ள கழிப்பறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

  அதை தரமான நவீன கழிப்பறையாக  கட்டி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பயன்படத்தக்க வகையில் சீரமைத்து தரவேண்டும்.

   பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் இது போன்ற முயற்சிகளுக்கு நாங்கள் தீவிரமுயற்சி எடுத்து செய்கிறோம்.

Also Read  பணியாளர்களுக்கு இருவேளை உணவு வழங்கும் இருக்கன்குடி ஊராட்சி

சுமார் 5 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட எங்களது கிராமத்தில், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என்கின்ற கொள்கையில் நாங்கள் செயல்பட காத்திருக்கிறோம்.

   கடந்த குடியரசு தினவிழாவில்  மனித நேய வார விழா ஒன்று நடத்தினோம்.

அதில் மாவட்ட காவல்துறை தலைவர், மற்றும் டிஎஸ்பி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் தாசில்தார், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பாலர் கலந்து கொண்டு சிறப்பித்து எங்களுக்கு மிகவும் சிறப்பாக இருந்தது.

  வரும் காலகட்டத்தில் எங்கள் கிராமத்தை தமிழகத்தில் ஒரு முன்மாதிரியான ஒரு கிராமமாக உயர்வடைய செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றார் அயன் கொல்லங்கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை….!
அவரது எண்ணங்களும் செயல்களும் வெற்றி அடைய நமது வாழ்த்துக்கள்….!

செய்திகள்:-சங்கரமூர்த்தி
                        7373141119