மேலராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்

தலைவர் விவேகானந்தன்

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,மேல ராஜ குலராமன் ஊராட்சிமன்ற தலைவர் விவேகானந்தன்.

நமது “tn பஞ்சாயத்து செய்திகளுக்காக” அளித்த சிறப்பு பேட்டியில், அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:-

எங்களது ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட வார்டு 12.
அதில் முதலில் நாங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணி சுத்தம், சுகாதாரம்.எங்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட 12வார்டுகளில் வாழும் மக்கள் தொகை சுமார் 18,000 பேர்.

இதில் அய்யனாபுரம் என்கின்ற பகுதியில் மட்டும் 6500 பேர் வசிக்கின்றார்கள்.
அவர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுப்பதே எங்களின் முதல் கட்ட பணியாக எடுத்துக்கொண்டேன்.காரணம் மழை பெய்யும் காலங்களில் ஒட்டுமொத்த மழை நீரும் அய்யனாபுரம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து ஒரு சிறு ஊரணி (குளம்) போலாகிவிடும்.

ஏன்னெண்றால் அங்கு வாறுகால்(சாக்கடை) வசதிகள் சரிவர இல்லை.

  வாறுகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென்றால் இயந்திர சக்தியுடன் அங்கு உள்ள வீதிகளில் செல்ல முடியாது காரணம், மிகவும் குறுகலான 5 அடி, 6அடி,கொண்ட வழிதட பாதைகள் தான்.

  எனவே மனித சக்தியின் மூலமாக தான் இந்த வாறுகால் பணியை செப்பனிட முடிகிறது.

   தற்போது 5 அடி அகலமும் 6 அடி ஆழத்தில் வாறுங்கல் பணி மேற்கொள்ளப்பட்டு,  கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

Also Read  இடைவிடாது பணி செய்யும் அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவி

மிக முக்கியமாக இந்தப் பகுதியில் திறந்தவெளி கழிப்பிடமே பயன்பாட்டில் உள்ளது.

இங்கு உள்ள மகளிருக்காக 5 தெருக்களுக்கு சேர்த்து.
9,முக்கால் லட்சம் ரூபாய் செலவில் கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த திட்டத்தை செயல்படுத்த நான் இன்று (17.2.2020) எங்களது விருதுநகர் மாவட்ட ஆட்சியாளரை சந்திக்க உள்ளேன்.
என்று நமது நிருபரிடம் தெரிவித்தார், மேலராஜ குலராமன்,ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன்….

மேலராஜகுலராமன் ஊராட்சி மன்ற சிறப்பு பணிகள் சிறப்படைய நமது வாழ்த்துக்கள்.

செய்தி:- சங்கரமூர்த்தி
7373141119