வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் 73,274 தொகை ஆகும்.
ராமச்சந்திரபுரம் ஊராட்சியின் தலைவராக ஆறுமுகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எங்கள் இணையத்தின் சார்பாக வாழ்த்துக்கள்…
மேலும் அவர் எங்களிடம் கூறுகையில்,
மக்களுக்கு தேவையான அனைத்துப்பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறேன்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்கான அணைத்து பணிகளையும் முழு வீச்சில் செய்து கொண்டிருக்கிறேன்,
தெருக்களில் மின்சாரா விளக்குகள் அதாவது (LED) பல்புகள் பொருத்தும் பணிகள்
சிறப்பான முறையில் நடந்து வருகிறது.
ராமச்சந்திரபுரம் ஊராட்சியில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளேன்.
மேலும் மக்கள் பயன்படுத்தும் வகையில் சோலார் மின்சார வசதிகளையும் செய்து வருகிறேன்.
மேலும் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வும்,
மற்றும் அந்த நோயிலிருந்து நம்மை எப்படி தற்காத்து கொள்வது பற்றிய விஷயங்களை
மக்களிடம் நேரடியாக சென்று எடுத்துரைத்து கொண்டிருக்கிறோம் என்று எங்களிடம் கூறினார்.