பஞ்சாயத்துராஜ் 11வது அட்டவணையில் என்ன அதிகாரம்

அனைவரும் கட்டாயம் படியுங்கள்

மூன்றடுக்கு ஊராட்சி

ஊராட்சி,ஊராட்சி ஒன்றியம்,மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு ஊராட்சியாக உள்ளது.

இந்த மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பிற்கு அட்டவணை 11ல் கொடுத்துள்ள அதிகாரம் பற்றி தெரிந்துகொள்வோம்.(பிரிவு 243G )

  1. விவசாயம் மற்றும் விவசாய விரிவாக்க பணிகள்
  2. நில மேம்பாடு,நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தல்,நிலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பேணுதல்
  3. சிறிய நீர்பாசனங்களை நிர்வகித்தல்,நீர் ஆதரங்களை மேம்படுத்தல்
  4. கால்நடை வளர்ப்பு,கோழி வளர்ப்பு மற்றும் பால்பண்ணை
  5. மீன்வளம்
  6. சமூக காடுகள் மற்றும் பண்ணை காடுகள்
  7. சிறிய காடுகளின் மூலமான உற்பத்தி
  8. சிறு தொழில்கள்,உணவு பதப்படுத்தும் தொழில்
  9. காதி,கிராமம் மற்றும் குடிசைத் தொழில்கள்
  10. ஊரக வீட்டுவசதி
  11. குடிநீர்
  12. எரிபொருள் மற்றும் கால்நடை தீவனம்
  13. சாலைகள்,சிறுபாலங்கள்,பெரிய பாலங்கள்,படகு,நீர்வழிகள்
  14. ஊரக மின்மயமாக்கல் மற்றும் மின்விநியோகம்
  15. மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள்
  16. வறுமை ஒழிப்பு திட்டங்கள்
  17. தொடக்க கல்வி மற்றும் மேல்நிலை கல்வி
  18. தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில்கல்வி
  19. நூலகங்கள்
  20. சுகாதாரம் மற்றும் துப்புரவு மையங்கள் மருந்தகங்கள் உட்பட
  21. குடும்ப நலன்
  22. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
  23. சமூக நலம் மாற்றுதிறனாளிகள் மற்றும் மனநலம்குன்றியோர் நலம் உட்பட
  24. நலிவடைந்தோர் நலம் குறிப்பாக பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர்
  25. பொதுவிநியோக முறை
  26. சமுதாய சொத்துக்களை நிர்வகித்தல்
Also Read  பினாமி பஞ்சாயத்து தலைவர்கள்