வெங்காயம்- உணவே மருந்து தினமும் அருந்து

நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து

வெங்காயம்  (Allium cepa) ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை, வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும் கூறுவார்கள்.

வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து) சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளது.

வெங்காயத்தில் மிகக் குறைந்த அளவே ஊட்டச்சத்துகள் உள்ளன.

100 கிராம் எடையுடைய வெங்காயத்தில் 166கி.ஜூ (KJ) (40 கலோரிகள்) சக்தி அடங்கியுள்ளது.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள “அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம்.

அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம் கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும்,

அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

   வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும்.

வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு.

இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

      இருமல்  நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும் போது சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் பிரச்சினைகள் நீங்கும்.

பித்தம் குறைய, பித்த ஏப்பம் மறைய,நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பிரச்சனை நீங்கும்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

Also Read  அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்...!!

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.

அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

       வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

    வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

  வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும், ஆண்மை பெருகும்.

   திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

சீதபேதி நிற்க வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

நன்கு தூக்கம் வர வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் போதும் நன்கு தூக்கம் வரும்,மேலும் பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

  குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே அனைவரும் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் நுரையீரல் சுத்தமாக, வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

Also Read  புளி-தலைவலி போக்கும் மருந்து தெரியுமா?

   மூட்டு வலிகளுக்கு, வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து தடவிவர மூட்டுவலி குணமாகும்.

   முகப்பரு நீங்க வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி மாலைக்கண் நோய் நீங்கும்.

  பாம்பு கடிக்கு வெங்காயம் சிறந்த நிவரணி வெங்காயம் விஷத்தை இறங்கும்,

அது போல் வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும் தற்காலிக முதலுதவியாகும்.

   நகச்சுற்று நீங்க ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

காக்காய் வலிப்பு நோயாளிகள், மற்றும் டி.பி.நோய், வாத நோய்களுக்கு வெங்காயச் சாறு சிறந்த மருந்தாகும்.

    பசும் தயிருடன் வெங்காயத்தை சாப்பிட்டுவர தாது பலமாகும்.

  தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் உதிரச் சிக்கல் நீங்கும்

   வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

    தலைவலி நிவாரணி வெங்காயம், இதை அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

“காயமே பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா..!” என்று சித்தர்கள் பாடி வைத்தார்கள்.

வெறும் காற்றடைத்த இந்த உடல் எனும்  பைக்கு ஏற்படும் உபாதையை, போக்க இறைவன் தந்த அற்புத காயமே…!
வெங்காயம் எனும் அரியதோர் பொக்கிஷம்…!

ஆகவே நமது நாட்டு மூலிகை வளங்களை பயன் படுத்தி ஆங்கில மருந்துகளை அரவே தவிர்த்து,  உணவே மருந்தாக உண்டு  என்றென்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்…!

நோய் வரும் முன் காக்காப்பது சிறப்பு வந்த பின் பாக்கலாம் என்றால் அது மருத்துவருக்கு சிறப்பு…

எனவே
உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையிலே”
அன்புடன் உங்கள் சங்கரமூர்த்தி..
7373141119