பன்னப்பள்ளி ஊராட்சியில் என்ன பிரச்சனை- களம் இறங்கிய நமது இணையம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும்…

ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று  தமிழகத்தில் ஒரே பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  8-ஆக இருந்த  10-ஆக உயர்ந்துள்ளது.

இது அரசு மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதில் குறிப்பாக சூளுகிரி ஒன்றியத்தில் கொரோனா தொற்று அதிகம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பன்னப்பள்ளி ஊராட்சியில் கொரோனா தொற்றுக்காக எந்தவிதமான சிறப்பு சுகாதார பணிகள் எதுவும் செயல்படவில்லை என்ற செய்தி நமக்கு கிடைக்கப் பெற்று நாம் விசாரணையில் இறங்கினோம்.

ஊராட்சி தலைவர் மஞ்சுநாத் கவுடா விடம் தொடர்புகொண்டு கேட்டபோது சார் எல்லா வேலையும் நடந்துக்கிட்டு தான் இருக்கு.
என்ன…? பஞ்சாயத்து கட்டிடம் மட்டும் தான் சரியில்ல அது தான் பிரச்சனை அதுவும் சிக்கிரமா சரியாகிவிடும் என்று…. அரையும் குறையுமாக கன்னடம் கலந்த தமிழில் நம்மிடம் பேசினார்…

மேலும் பன்னப்பள்ளி ஊராட்சி மக்களிடம் கிடைக்கப்பெற்ற தகவல்களில் சில…

ஊராட்சி செயலாளருக்கும் எங்கள் வார்டு கவுன்சிலர்களுக்கும் ஒத்துப் போவதே இல்லை…

இதனால் பல அடிப்படையான வேலைகள் தேங்கிக் கிடக்கிறது. பஞ்சாயத்து பில்டிங் பாழடைந்து குடிகாரர்கள் கைவசமாக அது கிடக்கிறது…

Also Read  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 

கொரோனாவுக்காக போன மாசம் தான் மருந்து தெளித்தார்கள்..

மேலும் எங்களது பகுதிகளில் சுத்தம் சுகாதாரம் கேடுகள் அதிகம், அதை நீங்களே வந்து பார்த்துக் தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்கள் வார்டு கவுன்சிலர்களுக்கு, ஊராட்சி செயலாளருக்கும் ஏதோ பயங்கர பிரச்சினை ஏற்பட்டு, அதனால் உயர் அதிகாரிகள் வந்து விசாரணை செய்தார்கள்.

அதுக்காக கிருஷ்ணகிரிக்கு சென்று வந்தார்கள்.

அது என்ன பிரச்சினை என்று எங்களுக்குத் தெரியவும்மில்லை.‌ புரியவும்மில்லை… அதற்குள் கொரோனா வந்து பிரச்சினையை இழுத்து மூடிவிட்டார்கள்…

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. செயலாளருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் ஒத்துப் போவதில்லை என்பது மட்டும் நன்றாக புரிகிறது..

எங்கள் வார்டு பக்கம் யாருமே வருவதில்லை தினமும் தினமும் கிளீன் பண்றதும் இல்லை…. என்றார்கள் பாவப்பட்ட பன்னப்பள்ளி மக்கள்…!

ஊராட்சி செயலாளர்
ஊராட்சி செயலாளர்

இதுகுறித்து பண்ண பள்ளி ஊராட்சி செயலாளர் தேவராஜ்விடம் கேட்டபோது…

அதெல்லாம் சரியாக, எல்லா பணிகளும் சிறப்பாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது…
என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சிலர் ஏதாவது குறை கூறிக் கொண்டுதான் இருப்பார்கள்.

என் பணியை சிறப்பாக செய்து கொண்டுதான் இருக்கிறேன் என் மீது எந்த தவறும் இல்லை

பஞ்சாயத்து கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அங்கு கூட்டம் எதுவும் நடத்துவது இல்லை.

Also Read  அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்

பஞ்சாயத்து கட்டிடத்தில் நிலையை நான் உயர் அதிகாரிகளிடம் எடுத்து கூறி உள்ளேன்.

மிக விரைவில் பஞ்சாயத்துக்கு என்று ஒரு சிறப்பான கட்டிடமும் கட்டப்படும் என்று நம்மிடம் கூறினார்…!

உள்ளாட்சி பணியில் நல்லாட்சி செய்வது என்பது மிகவும் கடினமான பணிகளில் ஒன்று..

கிராம மக்கள் அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது மிகவும் சவால் மிகுந்த பணிகளில் ஒன்றாகும்.

அதில் பொறுப்பிலுள்ள அரசு பணியாளர்களும் சரி மக்களுக்கான சேவை செய்ய வந்துள்ள மக்கள் தொண்டர்களும் சரி,

இருவரும் இணைந்து கரம் கோர்த்து மக்கள் சேவையே மகேசன் சேவை என்று செய்தால் மட்டுமே சிறப்பாகும்.

தமிழகத்திலேயே பசுமை மண்டலமாக பெருமை பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை,  குறி வைத்துள்ள கொரோனாவை ஒழித்து.. மீண்டும் பசுமை மண்டலமாக உருவாக்க வேண்டும் என்றால்..!?!

சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பன்னப்பள்ளி கிராம ஊராட்சி உறுதி எடுத்தால் மட்டுமே முடியும்… காரணம் நாம் பதிவிட்டுள்ள படங்களே சாட்சி…

நாம் அறிந்த பல கசப்பான செய்திகளை பதிவிடவில்லை.சம்மந்தப்பட்டவர்கள் தவறை உணர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமும்.

மீண்டும் தவறு செய்தால்,அனைத்து விசயங்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.உயர்அதிகாரிகளிடமும் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதற்குரிய அனைத்தையும் நமது இணையம் சார்பாக செய்வோம்.