செங்குளம் கண்மாய் சிறப்புடன் நிரம்பும்- பேராசிரியர் ஆறுமுகம் உறுதி

எஸ்.இராமச்சந்திரபுரம்

நீர்மேலாண்மை பற்றி ஊராட்சி மன்றத்தலைவர் பேராசிரியர் ஆறுமுகம் அவர்களிடம் கேட்டோம்.

அவர் கூறியதாவது…

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் மழை நீரை மழை நீராகவே சேமித்திட திட்ட மதிப்பீடு தயார் செய்து, திட்ட வரைவு தயார் செய்து கொண்டிருக்கிறோம்.

மழைநீர் கழிவு நீர் கால்வாய்களில் சேராமல் தடுக்க முயற்சி செய்கிறோம்.

இது செங்குளம் கண்மாய் செல்லும் வரத்துக் கால்வாய். ஒரு பகுதி தூர்வாரும் பணிகள் முடிந்து விட்டது. பல ஆண்டுகளாக செய்யாதது காரணமாக முட்புதர் மண்டி கிடக்கின்றன.

செங்குளம் கண்மாய் முழுவதும் பரவிக்கிடக்கின்ற கருவேல மரங்கள் மற்றும் ஆதாலை செடிகளை ஜூன் மாதம் இறுதிக்குள் அகற்றப்பட்டு அதிகமான நீர் சேமிப்பை உறுதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

செங்குளம் கண்மாய் செல்லும் வரத்துக் கால்வாய் இரண்டும் ஜூன் முதல் வாரத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக மழை காரணமாக பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பு மையங்களாக மாற்றம் முயற்சி குறித்து பரிசீலித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பல்வேறு கனவுகளோடு பதவிக்கு வந்துள்ள பேராசிரியர் ஆறுமுகம் தொடர்ந்து சாதிக்க நாமும் வாழ்த்துவோம்.

Also Read  தடையில்லா குடிநீர்-சொக்கநாதன்புத்தூர் தலைவி சூளுரை