தமிழ்நாட்டில் மகளிர் திட்டத்தில் 600 கோடி ஊழல் என்று தினமலர் நாளிதழில் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டு உள்ளதே ஒற்றரே…
ஆமாம் தலைவா…மாபெரும் ஊழல் நடந்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாண காலகட்டங்களில் நடந்துள்ளதை விரிவாக விசாரிக்க வேண்டும் தலைவா…பெண்களின் மேம்பாட்டிற்கான நிதியை பெருமளவு எடுத்து தங்களின் கஜானவை நிரப்பி உள்ளனர் அதிகாரிகள்.
மாவட்ட அளவில் மட்டும் தானா ஒற்றரே…
இல்லை தலைவா…மாநில நிலை அதிகாரிகள் உச்சபட்சமாக ஊழலில் ஈடுபட்டு உள்ளனராம்.தற்போது ஊரக வளர்ச்சி துறையில் அதிகாரமிக்க இடத்தில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் மகளிர் திட்டத்தில் நீண்ட காலமாக பணிபுரிந்த காலகட்டத்தை முக்கியமாக விசாரிக்க வேண்டுமாம்.அந்த காலகட்டத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாம்.
அது யார் ஒற்றரே…
ஆரம்ப நிலையில் அவர்களின் பெயரை வெளியிடுவது பத்திரிகை தர்மம் ஆகாது தலைவா.அதனால் அவர்களின் பெயர் வேண்டும். விசாரணை எப்படி செல்கிறது என்பதை தொடர்ந்து கண்காணிப்போம். சம்மந்தப்பட்டவர்கள் தப்பிக்க முயன்றால் அப்போது அவர்களை பற்றிய விவரங்களை வெளியிடுவோம் தலைவா.
அதுதான் சரி ஒற்றரே…
பெண்களின் கண்ணீருக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்.அதிலும் பெண்களின் பணத்தை பெண் அதிகாரிகள் சிலரே அதிகம் களவாடி உள்ளது தான் வருத்தமாக உள்ளது என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.
























