என்ன ஒற்றரே…வித்தியாசமான செய்தியாக உள்ளது.
ஆமாம் தலைவா…ஊரக வளர்ச்சி துறையில் கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக இஆப அதிகாரிகளை நியமித்து வந்தனர்.அதனையே, துறை அதிகாரிகளின் பணி உயர்வு பாதிக்கப்படுவதாக அதிருப்தி நிலவி வந்தது.
ஐஎப்எஸ் அதிகாரி நியமனம் அராஜகம் ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஊரக வளர்ச்சித்துறை ஒட்டுமொத்தமாக அழிக்கும் செயலை செய்து வருகின்றனர். IFS அதிகாரிகளான இருவரை கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்ட திட்ட இயக்குநர்களாக நியமித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது அந்த துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊரக வளர்ச்சி துறையில் உச்ச அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் ஒற் றரே…
இந்த செயலுக்கு எதிர்ப்பை பதிவு செய்தார்களா என தெரியவில்லை. ஆனா,அடுத்த நிலை அதிகாரிகள் இதனை எதிர்த்து போராடவில்லை எனில் ஊரக வளர்ச்சி துறையின் அழிவை ஆண்டவனால. கூட காப்பாற்ற முடியாது என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.
























