என்ன ஒற்றரே…அதிர்ச்சியான செய்தியாக உள்ளதே..
ஆமாம் தலைவா…நகர்புறத்தை ஒட்டி உள்ள ஊராட்சிகளை மட்டும் ஒருங்கிணைத்து தனியாக நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த போகிறார்களாம்.அந்த நிர்வாகத்தில் செயல் அலுவலர் நிலை அலுவலர் முதல் அவருக்கு கீழ் மூன்று அலுவலர்கள் இருப்பார்களாம்.
ஊராட்சி செயலாளரின் நிலை என்ன ஒற்றரே..
அந்த 600க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் அதிகாரம் ஏதும் இல்லா பணியாளராக மட்டுமே இருப்பார்களாம் தலைவா..
இப்படி ஒரு சிந்தனை யாருக்கு ஒற்றரே உதித்ததாம்.
யாருக்கு உதித்தால் என்ன தலைவா..ஊரக வளர்ச்சித்துறை விரைவில் அழிவை நோக்கி செல்லும் என்பது யாதார்த்த நிலை தலைவா…இப்படி ஒரு திட்டத்தை சிந்தித்த நபருக்கு சைதாபேட்டை கலைஞர் நூற்றாண்டு வளைவு அருகில. சிலை வைத்து சிறப்பிக்க வேண்டும்.
சரியாக சொன்னீர் ஒற்றரே…
இட்டுக்குன்னு வந்து இட்டுக்கின்னு போவதற்கே நேரம் சரியாக இருக்கிறது போல. துறையை பற்றி சிறிய சிந்தனை கூட துறை அமைச்சருக்கு இல்லை என வருந்துகிறார்கள்.விரைவில் ஊரக வளர்ச்சித்துறை நகராட்சி துறையோடு இணைத்த செய்தியை எதிர்பார்க்கலாம் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.


























