ஓய்வு பிரச்சனை ஓயாதா ஒற்றரே…
ஆமாம் தலைவா…ஊரக வளர்ச்சி துறையில் ஒருவர் இந்த மாதம் ஓய்வு பெறுகிறார் என்றால், அவர் பதவி உயர்வு பட்டியலில் இருந்தால்,அவருக்கு பதவி உயர்வு கொடுத்து பணி ஓய்வு கொடுத்து வந்த நிலை மாறிவிட்டது.
அதனால் என்ன ஒற்றரே..
ஒருவர் பதவி உயர்வால் ஓய்வூதிய பலன் அதிகரிக்கும்.ஓய்வு பெறும் நாளான்று கூட பதவி உயர்வு வழங்கிய வரலாற்று நிலை ஊரக வளர்ச்சி துறையில் நடந்தது.இன்று,குறிப்பிட்ட நாளில் ஓய்வு பெறுவது கூட பெரும்பாடாக உள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை சங்கங்கள் என்ன செய்கிறது..அதேயே தான் அனைத்து அலுவலர்களும் நம்மிடம் மனக்குமுறலை கொட்டி வருகின்ளனர் ஒற்றரே…
இந்த மாதம் ஓய்வுபெறும் அதிகாரி ஒருவர் நம்மிடம் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார். ஓய்வு பெறுவதற்கு நிலுவையில் உள்ள கோப்புகள் தடையாக உள்ளன. வாரம் ஒருமுறை சென்னை வந்து சம்மந்தப்பட்ட தலைமை செயலக அலுவலர்களை சந்தித்து அலுத்துவிட்டது. கடந்த காலம் எங்களின் பொன்னான காலம். அந்த நாயகனின் அருமை இப்போதுதான் தெரிகிறது என்றார் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.




















