வட்டம் மாவட்டம்னு வரிசை கட்டுறாங்க – ஒற்றர் ஓலை

மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததால், தனி அலுவலர் பொறுப்பில் உள்ளனர்.

ஆமாம் ஒற்றரே…ஜனவரி 6ல்  அதிகாரம் மாற்றம் நடந்து முடிந்துவிட்டதே…

தலைவா..சில மாவட்டங்களில் ஊராட்சி தலைவர் பொறுப்பை ஒப்படைக்காமல், கோப்புகளை எடுத்து சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளதாம்.

எனக்கும் தகவல் வந்தது ஒற்றரே..அவர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுள்ளதாம். அதைவிட கொடுமை, அதிகாரிகள் மீது சாதி சாயம் பூசி பிரச்சனையை திசை திருப்ப முயற்சி நடக்கிறதாம்.

இதற்கு சரியான முடிவை துறையின் தலைமை தான் எடுக்கவேண்டும் தலைவா..

வேற முக்கிய செய்தி உண்டா ஒற்றரே…

அதிமுக்கிய செய்தி தலைவா…ஆளும் கட்சியின் வட்டம் முதல் மாவட்டம் வரை பொறுப்பில் உள்ளவர்கள் தனி அலுவலர்களை மிரட்டும் செயல் ஆரம்பம் ஆகிவிட்டதாம். தங்கள் அனுமதி இல்லாமல் எந்த பணியும் நடைபெறக் கூடாதுன்னு உத்தரவு போடுகிறார்களாம்.

அடப்பாவமே…ஆரம்பமே சரியா இல்லையே.இதனால் ஆளும் அரசுக்குத் தானே கெட்ட பெயர்.

சரியா சொன்னீங்க தலைவா…பல தனி அலுவலர்கள் இருதலை கொள்ளி எறும்பாக தவித்து வருகின்றனர். அவர்களுக்கு சரியான வழி காட்டவேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு உள்ளது. நானும் தொடர்ந்து உளவறிந்து செய்திகளை சொல்கிறேன்.

திரும்பி பார்பதற்குள் மாயமாய் மறைந்தார் ஒற்றர்.

Also Read  பூட்டை ஊராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்