மாவட்ட ஆட்சியர்
1999 முதல் அமைக்கப்பட்ட ஊரக மாவட்ட முகமைக்கு தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சியர் பெருந்தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நடைமுறை இந்தியா முழுமைக்கும் இருந்து வருகிறது. மற்ற துறைகளை விட, மத்திய அரசு இந்த துறைக்கு தான் 90 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
அதனால் மாவட்ட முகமையின் கட்டமைப்பு மத்திய அரசின் வழிகாட்டுதலில் நடைபெறவேண்டும் என்பது வழிமுறையாக உள்ளது.
மாவட்டத்தில் நடைபெற உள்ள புதிய திட்டங்களுக்கு நிர்வாக அனுமதி வழங்குவது மாவட்ட ஆட்சியர் தான்.திட்ட இயக்குநர்,உதவி இயக்குநர் அனுப்பும் கோப்புகளுக்கு அனுமதி வழங்கி வருகின்றனர்.
அதனால் தமிழ்நாட்டின் பூகோளம் தெரிந்த இந்திய ஆட்சி பணியாளர்களை மாவட்ட ஆட்சியராக நியமிப்பது தமிழக அரசின் கடமையாகும்.
திட்ட இயக்குநர்
ஒவ்வொரு மாவட ஊரக முகமையின் உயர்பொறுப்பு அதிகாரியாக பணியாற்றுகிறார்கள்.அலுவலக பணியை விட களப்பணியாற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளில் திட்ட இயக்குநர்களின் பணி அளப்பரியது.
அந்தந்த மாவட்டத்தை அங்குலம் அங்குலமாக தெரிந்தவராக இருப்பது மிக மிக அவசியம். குளுகுளு அறைக்குள் இருந்து மட்டும் முடிவு எடுக்கும் பதவி அல்ல இது.
ஆகவே, இந்த பதவிகளுக்கு இந்திய ஆட்சி பணியாளர்களை நியமிக்கும் நடைமுறையை முழுமையாக ரத்து செய்யவேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து பணிக்கு வருபவர்களால் மட்டுமே நமது மாநிலத்தின் கிராமப்புறங்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.
இந்த நிர்வாக முடிவை மாண்புமிகு அமைச்சர், துறையின் முதன்மை செயலாளர், துறையின் ஆணையர் இணைந்து எடுக்க வேண்டியது மிக அவசியம் ஆகும்.