பாராட்டுக்கு உரிய திட்ட இயக்குநர்கள் -ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…தவறுகளை மட்டுமே கொண்டு வரும் நீர்…பாராட்டு செய்தியோடு வந்துள்ளீரகளே.

ஆமாம் தலைவா…நல்லது செய்பவர்களை பாராட்டினால் தானே,அடுத்தடுத்து வருபவர்கள் நல்லதை செய்வர்.

சரியாக சொன்னீர்..பாராட்ட ஆரம்பிங்க ஒற்றரே..

ஒவ்வொருவராக பாராட்டி வருகிறேன் தலைவா…தென்கோடியில் உள்ள முத்து மாவட்ட திட்ட இயக்குநரை குறிப்பிட்ட சங்கத்தினர் சந்தித்து,ஒரு ஒன்றியத்தில் ஓடிபி பிரச்சனையை பற்றி கூறி உள்ளனர். அவர்கள் சொன்ன பிரச்சனைக்கு உடனடி தீர்வை கொடுத்துள்ளார் குன்றில் குடியிருக்கும் கடவுள் பெயர்கொண்ட திட்ட இயக்குநர்.

பெயரை கண்டுபிடித்து விட்டேன் ஒற்றரே…அடுத்த தகவல்.

அதே சங்கத்தின் மாநில தலைமை பொதிகை மலைச்சாரல் மாவட்ட திட்ட இயக்குநரிடம் முக்கிய கோரிக்கைக்காக சந்தித்து உள்ளனர். மனதார வரவேற்ற விதத்தில் எங்களின் இதய கவர்ந்து விட்டார் அந்த ராமர் நாமம் கொண்டவர் என்றனர் நம்மிடம்.அவர்களின் கோரிக்கையை நிச்சயம் செய்து தருதாக உறுதி அளித்துள்ளாராம்.

சிவ சிவ என சொல்லத் தோன்றுகிறது ஒற்றரே…அடுத்த செய்தி.

சமீப இடமாறுதலால் வடமாவட்டத்திற்கு இடமாறுதலில் சென்றுள்ள தென்மாவட்ட திட்ட இயக்குநரின் அலுவலக ஊழியர் ஒருவர் கண்ணீரோடு பகிர்ந்த விடயம். கீழ்நிலை ஊழியர் முதல் திட்ட இயக்குநரக அதிகாரிகள் வரை அனைவரையும் இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து சென்றார். அனைவருக்கும் சமமான உபசரிப்போடு எங்களை கவர்ந்த அய்யா எங்களைவிட்டு இடமாறுதலில் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார் அந்த பட்டாசு மாவட்டத்தை சேர்ந்தவர்.

Also Read  பெரும் நெருக்கடியில் ஊராட்சி செயலாளர்கள்- ஒற்றர் ஓலை

அனைவருக்கும் பிடித்த கேசவா… .கேசவா..அடுத்த பாராட்டு ஒற்றரே..

மாண்புமிக்க மகளிர் ஒருவர்.சமீப இடமாறுதலில் முகமை விடுத்து மகளிர் திட்டத்திற்கு சென்றுள்ள திட்ட இயக்குநர். தேர்தல் ஆணையம் என்ற ஒன்றின் அதிகாரம் ஷேசன் என்பவர் வந்த பிறகே நமக்கு தெரிந்தது அல்லவா.அதுபோல, மகளிர் திட்டத்தின் மகிமை அனைவரும் அறியும் வகையில் பணியாற்றி வருகிறார் பூட்டு மாவட்ட அதிகாரி.இன்னும் சில மாதங்களில் அந்த மாவட்ட மகளிர் துறையின் திட்டங்கள் நாடறிய வரும் போது அனைவருக்கும் அது ஆச்சர்யமாக இருக்கும் தலைவா…

அவ்வளவுதானா…இன்னும் இருக்கா ஒற்றரே…

அவ்வளவு தான் தலைவா…தரணி செழிக்க கங்கை பாயட்டும் என அந்த அதிகாரியின் பெயரை மறைமுகமாக கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர.